மேhttps://youtu.be/9h7IO_NIy7c
ற்கு தொடர்ச்சி மலை என்றாலே அனைவராலும் அறியப்படும் ஒன்று மலையும் மலையும் சார்ந்த வயல்வெளி. அருவிப் பகுதி. அதைக் கடந்து ஆன்மீகம் சார்ந்த கோவில் பகுதி மட்டும்தான் இது இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக இயற்கையை மையப்படுத்தி இறைவனை வணங்கிய காலம் முதல் இன்றுவரை மழையும் இயற்கையும் சார்ந்த ஒன்று குற்றாலம் பகுதி இருந்து வருகிறது ஆனால் திடீரென சாப்பிடுகிற உணவில் மண்ணை அள்ளிய தட்டியது போல் கண்ணீர்விடும் காட்சியாக தற்போது அரங்கேற்றி வருகிறது இலஞ்சி என்றாலே இதிகாசங்களில் இயற்கை சார்ந்த பகுதி என்று குற்றால குறவஞ்சி புத்தகத்தில் திருச்செந்தூர் ஆதி புராணக் கதைகளில் இலஞ்சியை மையப்படுத்தி பல்வேறு கதைகளை கொண்டுள்ளது.. ஆனால் புராண காலத்தில் உள்ள இலஞ்சி என்னும் பழமையான ஊரின் தற்போது முப் போகும் விளையக்கூடிய வயல் நிலங்களில் யாரோ பணம் படைத்த துறை சார்ந்த அதிகாரி (revenue department) ஒருவர் அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி விளைக்கின்ற மண்ணில் பாறைகளை கொண்டு வயல்வெளிகளில் நிரப்பி (சிறிய டென்னிஸ் மைதானம்) கட்டப்படுவதாக அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த தகவல்.. இப்படி படித்த அதிகாரிகளே நீங்களே இதுபோன்ற தவறுகளை செய்யலாமா?? இதற்கு யாரு உடந்தை… விளைகின்ற வயல் பகுதியில் கட்டிடம் கட்டும் அனுமதியளித்த அதிகாரிகள் யார்?? சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரி எந்த அடிப்படையில் கட்டுவதற்கு அனுமதி அளித்தார்கள்??? புகழ்மிக்க வழிபாட்டுத்தளம் இருக்கும் பகுதியில் இயற்கையை விவசாயத்தை அழித்து கட்டிடம் கட்டும் அனுமதி அளித்த மாவட்ட நிர்வாகமே… உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் இதே நிலைமை நீடித்தால் சோற்றுக்குப் அதில் மண்ணை அள்ளி திங்கும் காலம் வந்துவிடும்… விவசாயம் சார்ந்த பெருங்குடி மக்களே… சிந்திப்பீர் செயல்படுவீர் மக்கள் பணியில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு