கோக்கு மாக்கு

பீடி சுற்றும் தலமாக மாறும் அங்கன்வாடி ஏமார்ந்து வீடு திரும்பும் குழந்தைகள்!

அருணாசலபுரம் கிராமத்தில் குழந்தைகளை கவனிக்காத அங்கன்வாடி பணியாளர்கள்…..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட அருணாசலபுரம் கிராமத்தில் பழமையான அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது.அங்கன்வாடி பணியாளர்கள் சரிவர அங்கன்வாடி மையத்திற்கு வராமல் இருப்பதாலும் அங்கன்வாடி மையத்தில் இல்லாமல் தங்களது சொந்த வேலையை செய்வதில் அவர்கள் வீட்டிற்கு சென்று விடுவதால் குழந்தைகள் அனாதையாக அங்கு இருந்து வருகின்றனர்.

இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். குறைந்த அளவே அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் வருகின்றனர். உணவு சமையல் செய்யும் பணியாளர் விஜயா என்பவர் அவரது சொந்த வேலையை மட்டுமே செய்து வருவதாகவும், அங்கன்வாடி மையத்தில் எப்பொழுதும் இருப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.மேலும் அங்கன்வாடிமையத்தின் கதவை திறந்துவிட்டு தனது சொந்தவேலையை விஜயா பார்க்க சென்றுவிடுகிறார்.இதனைதொடர்ந்து குழந்தைகள் சென்றுபார்க்கும் பொழுது யாரும் இல்லை என்று திரும்பி வந்துவிடுகிறார்கள்.

மேலும் அவர் அங்கன்வாடி மையத்தில் இருந்தாலும் பீடி சுற்றும் தொழில் மட்டும் செய்து வருகிறார். அங்காடின்வாடி மையத்தில் பீடி சுற்றுவதால் குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது .

எனவே தங்களை யார் கேள்வி கேட்பார்கள் என்று பயம் கொஞ்சம்கூட இல்லாமல் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை பராமரிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலை வருகிறது.

மேலும் அந்த அங்கன்வாடி மையம் அருகே மர்ம நபர்கள் மதுவை குடித்துவிட்டு மது பாட்டில்களை அப்படியே போட்டு செல்வதும் அந்த அங்கன்வாடி மையத்திலேயே மலம் ஜலம் கழித்து விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இவ்வாறு நடைபெற்று வரும் நிலையில் அந்த அங்கன்வாடி பணியாளர்கள் இதை தங்களது அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதே இல்லை. மேலும் இந்த அங்கன்வாடி மையத்தில் உணவு சமைத்து தரும் பணியாளர்கள் விஜயா என்பவர் மகன் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் மது அருந்துவதாக கூறப்படுகிறது. தனது மகன் மற்றும் உறவினர்கள் தொடர்பில் இருப்பதால் அதிகாரிகளுக்கு அவர்கள் தெரியபடுத்துவதில்லை . மேலும் அங்கன்வாடி மையத்திற்கு வரும் முட்டை மற்றும் ஊட்டச்சத்து மாவு இதை மற்ற நபர்களிடம் விஜயா என்பவர் விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உடனே ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்……

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button