கோக்கு மாக்கு

பஞ் தலைவரின் கணவர் அடாவடி பதறும் பொது மக்கள்!

ச.ராஜேஷ்
மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெறிச்செயல். இட தகராறில் வேலிக்கு தீ வைத்து இடத்தில் குடியிருந்து அனுபவித்து வருபவரை ஓட ஓட விரட்டி அடிக்கும் காட்சி. சமூக வலைதளத்தில் வைரல்
.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க வைச் சேர்ந்த அன்புமணி இருந்து வருகிறார்.இவரது கணவரும் முன்னாள் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவருமான மணிமாறன் மற்றும் அவரது மகன்கள் இணைந்து இவரது வீட்டின் அருகே உள்ள பிரகலாதன் என்பவரின் அனுபவத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் இடம் தொடர்பாக தொடர்ந்து சண்டை இட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மணிமாறன் அவரது இரண்டு மகன்கள் சேர்ந்து பிரகலாதன் அனுபவித்து வரும் இடத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த வேலியை தீ வைத்துக் கொளுத்தினராம் .அப்போது இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பிரகலாதனையும் அவர் தந்தை மணியையும், மணிமாறன் தரப்பினர் கட்டையால் ஓட ,ஓட விரட்டி அடித்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரகலாதன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மணிமாறன் , பிரகலாதன் குடும்பத்தினரை அடித்து விரட்டும் காட்சிகளும் வேலியை தீ வைத்துக் கொளுத்தும் காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் காட்சியால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button