தொலைநோக்குப் பார்வையில் மாண்புமிகு முன்னாள் முதல்வர்கள் திட்டமான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டம்…. தற்போது பழைய இரும்பு பொருட்கள் வியாபாரிகளின் சொகுசு திட்டமாக இருக்கிறது…..
ஆம் தென்காசி மாவட்டம் பல அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது ஆனால் பாவூர்சத்திரம் ஆலங்குளம் செங்கோட்டை போன்ற பகுதிகளில் பழைய இரும்பு கடைகளில் அணிவகுத்து நிற்கிறது அரசு திட்டமான இலவச சைக்கிள் திட்டம் இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது ஏற்கனவே பல லட்சக்கணங்களில் கடனில் தத்தளிக்கிறது தமிழகம் பல முன்னணி செய்தித்தாள்களிலும் தொலைக் காட்சிகளிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது இப்படி இலவச பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொடுக்கப்படும் லேப்டாப் இலவச சைக்கிள் இவை எல்லாம் கொடுத்த சில நொடிகளிலே விற்பனையாகிறது இது போன்ற விற்பனை செய்பவர்கள் மீது வாங்குவோர் மீதும் கடுமையான நடவடிக்கையும் சட்டமும் இயற்றப்பட்டால் இத்திட்டத்தின் நோக்கம் சரியாக இருக்கும் தமிழக முழுவதும் கல்விக்காக இது போன்ற திட்டங்களில் தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது வருகின்ற ஆண்டில் ஆவது முறையான திட்டத்தை தொகுத்து மாணவ மாணவிகளின் எதிர்காலத்திற்கு கூடுதலாக கல்லூரிகளும் கட்டிடங்களை உருவாக்க வேண்டும் இதுபோன்ற திட்டங்களில் ஒரு சிலரால் பயன் அடைகிறார்கள் மற்றவைஎல்லாம் காய்லாங்கடை வைத்திருப்பவர்களுக்கு தான் லாபமாக தெரிகிறது இது சம்பந்தமாக தமிழக அரசு சிறப்பு கவனம் எடுத்து முறையான அணுகுமுறையை அணிவதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் பார்வைக்கும் நடவடிக்கையும் தேவை…. விசில் சிறப்பு செய்தி பிரிவு
வீரமணி