“சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதிஷை கைது செய்தது தனிப்படை போலீஸ்”
“மகள் இறந்த சோகத்தில் மாணவி சத்யாவின் தந்தையும் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளது அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது”
“ரயில் நிலையங்கள் காதல் விவகாரங்களின் மரண நிலையங்களாக மாறி வருகிறதா???”
சென்னை கிண்டி அடுத்தா ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23), அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா (20) தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர்.
அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் முன்பு சதீஷ், சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.
இதில் ரயிலில் சிக்கி சத்தியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் சத்யாவின் உடலை கைப்பற்றி போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து நிலையில், தப்பியோடிய சதீஷை 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், ஈசிஆர் பகுதியில் சுற்றி திரிந்த சதீஷை தனிப்படை போலீசார் கைது செய்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே வேளையில் மகள் இருந்த சோகத்தில் மாணவி சத்யாவின் தந்தையும் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். மகள் சத்யாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சத்யாவின் தந்தை மாணிக்கம் உடலும் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதியை ராம்குமார் கொலை செய்தது, 2021 ஆம் ஆண்டு தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஸ்வேதா கத்தியால் கொலை செய்யப்பட்டது, தற்போது சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியா படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள வேளையில் ரயில் நிலையங்கள் காதல் விவகாரங்களின் மரண நிலையங்களாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை.