கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்….
கோவை, உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்.,23ல் நடந்த காரில் சிலிண்டர் வெடித்ததில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் பலியானார். விசாரணையில் முக்கிய இடங்களில் குண்டு வைப்பதற்கு சதித்திட்டம் தீட்டி செயல்பட்டது தெரியவந்தது. இதில், தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் எஸ் பி மற்றும் விசாரணை குழுவினர் இன்று காலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர் கோவில் பூசாரி சுந்தரேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது…
வழக்கு தொடர்பான பல்வேறு விவரங்களையும் சேகரித்தனர்.