சிக்குகிறார்கள்
குற்றாலம் கோவில் நிர்வாகிகள்
குற்றாலம் கோவிலுக்கு சொந்தமான கடைகளில் ஏலம் விடபட்டதில் ஏகபட்ட ஊழல் அம்பலமாகிறது
அரசுக்கு வருமானம் இழப்பு செய்த அதிகாரிகள்
தமிழக இந்து சமய அறநிலை துறை மற்றும் ஊழல் தடுப்பு விஜிலென்ஸ் அதிகாரிகளின் பார்வை விழுந்திள்ளதாக கூறபடுகிறது
தற்போது ஐயப்ப சீசன் காலம் நெருங்குகிறது இதை முன்னிட்டு குற்றாலநாத திருக்கோவிலில் சார்பாக தரை வாடகை இடம் விடப்படும் உலக வரலாற்றிலேயே தரையை மட்டும் வருடத்திற்கு இரண்டு முறை வாடகைக்கு விட்டு பல கோடி ரூபாய் வருமான வர கூடிய ஒரு திருக்கோவில் தென்காசி மாவட்டம் குற்றாலநாதர் திருக்கோவில் மட்டுமே..
இப்படி புகழ் வாய்ந்த திருக்கோவில் இன்று அழிவில் விளிம்பில் இருந்து வருகிறது அடிப்படை வசதிகள் இல்லாமல் காட்சியளிக்கிறது
அது ஒரு புறம் இருக்க.. 2: 11 :2022 அன்று குற்றாலநாதர் திருக்கோவில் சார்பாக ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இரண்டாவது ஏலம் அறிவிப்பு செய்யப்பட்டது
முதல் ஏலம் வசூல் தொகையை மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகியுள்ளது.. இரண்டாவது ஏலத்தில் 38 கடை ஏலம் சென்று இருக்கிறது இதில் சென்ற ஆண்டு விட்ட தொகையை விட சுமார் 60 லட்சம் குறைவாக விடபட்டு அரசின் வருவாயை அதிகாரிகள் இழப்பீடு செய்ததாக கூறபடுகிறது
திருக்குற்றாலநாதர் திருக்கோவிலுக்கு என்ன நடந்தது
யார் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தது
இரவு 7 மணிக்கு மேல் ஏலம் நடந்தது மர்மம் என்ன..?
ஏலம் எடுத்தவர்களுக்கு ஒரு தொகை திருக்கோவிலுக்கு கட்டப்பட்டு ஏலம் விரைவில் முடிக்கப்பட்டது
ஏலம் முடிக்கப்பட்டு மூன்று நாள் கழித்து ஏலம் எடுத்தவர்களை நைசாக பேசி அழைத்து நீங்கள் ஒவ்வொரு கடைகளுக்கும் குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டும் என கண்டிப்புடன் கேட்கும் நிர்வாக அதிகாரி ஏன் இந்த குளறுபடி சென்ற ஆண்டு வாடகைக்கு விடப்பட்ட தரை வாடகை இந்த ஆண்டு ஏலம் செல்லும் போது 10% உயர்வாகத்தான் ஏலம் விடப்படும் இது நடைமுறையில் ஒன்று
ஆனால் தற்போது திடீரென்று இரவு 7 மணிக்கு மேல் விடப்பட்ட ஏலத்தின் மர்மம் என்ன இதற்கு முன் சபரிமலை சீசனுக்கு மட்டும் கார் பார்க்கிங் 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்படும்.
ஜூன் ஜூலை ஆகஸ்ட் சீசன் காலங்களுக்கு ஒரு ஏலம் கார் பார்க்கிங் விடப்படும் அந்தத் தொகை 35 லட்ச ரூபாய்க்கு இருக்கும் வருடத்திற்கு ஒருகோடி ரூபாய்க்கு ஏலம் போகும்
குற்றாலநாதர் தேவஸ்தான கார் பார்க்கிங் தற்போது 38 லட்ச ரூபாய்க்கு மட்டும் வருடத்திற்கு சென்றிருக்கிறது
இதில் மர்மம் என்ன..?இதில் பெருமளவு ஊழல் நடைபெற்று உள்ளது என விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்
திருக்கோவிலில் பணிபுரியும் நிர்வாக அதிகாரி பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளாகிய வருகிறார் என்பது நிதர்சன உண்மையாக இருக்கிறது
ஒரு கடைக்கு பெயர் மாற்றி வருபவருக்கு பெயர் மாற்றி கொடுப்பதற்கு எண்ணற்ற காந்தி தாத்தா கை மாறி இருக்கிறது என குற்றம் சாட்டுகிறார்கள்
தூத்துக்குடியில் பணிபுரியும் இனை ஆணையாளர் அன்புமணி இது சம்பந்தமாக பேசுவதற்கு சமூக ஆர்வலர்கள் கைப்பேசியை தொடர்பு கொண்டால் எடுப்பதற்கு அவருக்கு மனமில்லை எனவும் குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்
மேலும்
குற்றம் செய்யும் அதிகாரியை காப்பாற்றுவதே குறியாக இருக்கிறார் இந்த அன்புமணி
அவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று சந்தேகிக்கிறது கோவில் சார்பாக எடுக்கப்பட்ட கடையை மாற்று சமூகத்திற்கு பல லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு கடையை நடத்துவதற்கு அனுமதி அளிக்கிறது இத்திருக்கோவில் நிர்வாகம்
எந்த உலகத்திலாவது திருக்கோவில் நடைபாதை படிக்கட்டுகள் ஏலம் போகுமா? உலகத்திலே குற்றாலத்தில் மட்டும் படிக்கட்டு கடை ஏலத்திற்கு போகும்
ஒரு படிக்கட்டு இரண்டு லட்சம் முதல் 3 லட்சம் வரை ஏலம் செல்கிறது இப்படி எதற்கெடுத்தாலும் வருவாய் கொட்டித் தரும் கோவிலுக்காவது நீங்கள் அடிப்படை வசதிகளை செய்திருக்கிறீர்களா
அதுவும் இல்லை
குற்றாலம் கோயிலுக்கு வரும் வருமானத்திற்கு பஞ்சமில்லை ஆனால் இங்கே குடிப்பதற்கு தண்ணீர் பஞ்சம் கழிப்பிட வசதி பஞ்சம் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை எல்லாம் ஆக்கிரமிப்பு அடிப்படை பெண்கள் கழிப்பட வசதி இல்லை வேலையாட்கள் பற்றாக்குறை தூய்மைப்படுத்துவதில் குறைபாடுகள் இந்து சமய அகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேக பணி மேற்கொள்ள வேண்டும்
14 ஆண்டு ஆகிவிட்டது இன்றும் கும்பாபிஷேகம் செய்வதற்கு எந்தவித அடிச் சுவடு இல்லை திருக்கோவிலுக்கு சொந்தமான கட்டளை சொத்துக்கள் ஏராளம் தற்போது குற்றாலம் சுற்றுலாத்தலமாக பிரபலமாக உள்ளதால் தென்காசி மாவட்டமாக அங்கீகாரம் பெற்றுள்ளதால் குற்றாலநாதர் சொந்தமான கட்டளை சொத்துக்கள் எல்லாம் தற்போது பல லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதற்கு முறையாக விசாரணை செய்வதற்கு என்று சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தால் பல்வேறு குற்றச்சாட்டுகளும் பல்வேறு உண்மைகளும் திடுக்கிடும் சம்பவங்களும் வெளிவரும்
என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்
விசில் செய்திகளுக்காக
வீரமணி