👆நல்ல பாம்புடன் டீ குடிக்க வந்த முதியவர் அலறி அடித்து மக்கள் ஓட்டம்.
🐍பாம்பு என்றாலே படை நடுங்கும். தமிழகத்தில் உள்ள கோயில்களில் பெரும்பாலும் பாம்புகள் சிலை மற்றும் விக்கிரகங்கள் இல்லாமல் இருக்காது. இதுபோக நாகர்கோவிலில் பாம்புக்கு என்று தனியாக நாகராஜா கோவில் உள்ளது.
🏮பாம்புகள் விவசாயிகள் உற்றதோழன். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல்வேறு வகையான அரிய வகை பாம்பு இனங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக ராஜ நாகம் என்று அழைக்கப்படும் பாம்பு வகைகள் இங்கு அதிக அளவில் வசித்து வருகின்றன. இவ்வாறு பாம்புகள் பற்றி பல அறியாத விஷயங்கள் நிறைய உள்ளது. இந்நிலையில் இன்று செங்கோட்டை பிரானூர் பார்டரில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கழுத்தில் நல்ல பாம்புடன் டீ குடிக்க வந்துள்ளார்.
🐍இதனைக் கண்ட டீக்கடையில் டீ குடிக்க வந்த அனைவரும் பதறிக்கொண்டு கொண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.