நெல்லை .
மான் வேட்டையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது . வேட்டையாடிய மான் ,இரண்டு துப்பாக்கிகள் ஸ்கார்பியோ வாகனம் பறிமுதல்.
வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி – பொட்டல்புதூர் சாலையில் காவல் துறையினர் வாகன சோதனை செய்த பொழுது ஸ்கார்பியோ காரில் இறந்த மான் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து காரில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய பொழுது வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது .இதனை அடுத்து காரில் வந்த உசிலம்பட்டியை சார்ந்த ஜோசுவா அஜய் ராஜ் உள்ளிட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்து வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.