ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
29.04.2022
செகந்திராபாத்
GHMC-யின் அலட்சியத்தால் சிறுமி மௌனிகா (6) ஆள்குழியில் விழுந்து இறந்தது.
நகரில் சனிக்கிழமை காலை பலத்த மழை பெய்தது.அந்த சமயம் கலாசிகுடாவில் பால் பாக்கெட்டுக்காக சென்ற மௌனிகா ஆள் குழியில் தவறி விழுந்தார்.GHMC ஊழியர்கள் மழைக்காக மேன்ஹோலைத் திறந்து வைத்திருந்தனர் அதனை கவனிக்காமல் சென்ற சிறுமி எதிர்பாராத விதமாக குழியில் தவறி விழுந்ததில் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது.
டிஆர்எஃப் பணியாளர்கள் பார்க் லைனில் குழந்தையின் உடலைக் கண்டுபிடித்தனர்.அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். GHMC அதிகாரிகள்.. திறந்திருக்கும் மேன்ஹோல்களை மூடாமல் விட்டுவிட்டு செல்வதால் அப்பகுதியில்… மழை பெய்யும் சமயத்தில் பொது மக்கள் அதில் விழுந்து உயிரிழக்கும் சம்பவம் சர்வ சாதாரணமாக நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறினர்