ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
29.04.2022
திருமலையில் வேங்கடவனுக்கும் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுக்கும் பரிணயோத்சவம்
3 நாட்கள் உத்சவத்தின் முதல் நாளில் கஜ வாகனத்தில் பவனி வந்த மலயப்பர்
திருமலை நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்ட அஷ்டலட்சுமி தசாவதார மண்டபத்தில் ஸ்ரீபத்மாவதி பரிணயோத்சவம் வைபமாக நடைபெற்றது. முதல் நாளன்று மலையப்ப சாமி யானை வாகனத்தில் பவனி வந்து நாராயண கிரி மண்டப்பதை அடைந்தார். உபய தேவியர்கள் தனி பல்லக்கில் மண்டபம் சேர்ந்தனர். அதன் பின்னர் மாலை மாற்றுதல் பூப்பந்து எறிதல் போன்றவற்றை தொடர்ந்து பெருமாள் தாயார்கள் திருக்கல்யாணம் இனிதே நடைபெற்றது. வேத பாராயணம் இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் பெருமாள் தாயார்கள் திருச்சி வாகனத்தில் ஆலயம் சேர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆலய அதிகாரிகள் அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.