ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
02.05.2022
மச்சிலிப்பட்டிணத்தை சேர்ந்த காதல் ஜோடி கோயிலுக்குள் புகுந்து கொண்டு வினோத போராட்டம்.
தமது காதல் திருமணதிற்கு உறவினர்களிடையே எதிர்ப்பு
பாதுகாப்பு அளிக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம்
மச்சிலிப்பட்டிணத்தை சேர்ந்த காதலர்கள் பெற்றோருக்கு தெரியாமல் அங்குள்ள ராமர் ஆலயத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த இரு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து காதல் ஜோடி கோயிலுக்குள் புகுந்து கொண்டு கதவை தாளிட்டு உள்ளிருந்து போராட்டம் செய்தனர்..
மணப்பெண்ணின் தந்தை காவல்துறை யை சேர்ந்தவர் என்பதால் அந்த ஜோடி பயத்தில் கோயில் கதவை மூடிக்கொண்டு தமக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். இல்லாவிட்டால் தம்மை தமது குடும்பத்தினர் பிரித்து விடக்கூடும் என்ற பயத்தால் கோயிலுக்குள் புகுந்து கொண்டதாகவும் பாதுகாப்பு கிடைக்காவிட்டால் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது . காவல்துறையினர் காதல் ஜோடிகளை சமாதானம் செய்து வெளியே அழைத்து வந்தனர்.