ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
15.05.2023
திருப்பதி:
கடப்பா மாவட்டத்தில் சாலை விபத்து
7 பேர் உயிரிழப்பு , 4 பேர் படுகாயம்
கடப்பா மாவட்டம், கொண்டாபுரம் மண்டலம், ஏடூரு அருகே
நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து நடந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற துஃபான் வாகனம் மீது லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் துஃபான் வாகனத்தில் பயணம் செய்த பிராயணிகளில் 7பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்..மற்றுமொரு 4பேருக்கு தீவிர காயம் ஏற்பட்டது. காயமைடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனந்தபுரத்தில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இறந்தவர்கள் அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்ரி ஊரை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டது.இறந்தவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஒரு சிறுமி .இவர்கள் திருமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் தாடிபத்ரிக்கு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.