வார இறுதி நாட்களில் சிபாரிசு கடிதங்கள் ஏற்க்கபட மாட்டாது
திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது
சாதாரண பக்தர்கள் வசதிக்கென்று ஆலய ஆர்ஜித சேவைகள் மற்றும் வி ஐ பி தரிசனங்களில் சிறு மாற்றங்கள் செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் கோடை விடுமுறையையொட்டி திருமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் முக்கியமாக வார இறுதி நாட்களில் பெருகி வரும் பக்தர்கள் கூட்டத்தால் தரிசனத்திற்கு சுமார் 30 மணி முதல் 40மணி நேரம் வரை தரிசனத்திற்கு காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
ஆகவே ஜூன் 30ம் தேதி வரையில் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்தை பொறுத்த வரையில் அவர்களே நேரில் வரும் பட்சத்தில் மட்டும் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
எனவும் வார விடுமுறை நாட்களில் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.
அதேபோல் சுப்ரபாதம் , வாராந்திர சேவைகள் ஏகந்தமாக நடத்தப்படும். இதனால் சாதாரண பக்தர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருப்பது குறைக்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் வார இறுதி நாளில்
திருமலையில் பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்த நிலை காணப்படுகிறது .
சர்வதரிசனதிற்கு சுமார் 9 கம்பார்ட்மெண்ட்களில் மட்டுமே பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
தரிசனத்திற்கு சுமார் 12
மணி நேரம் ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று 85,297 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவாரி உண்டியல் வருமானம் ரூ. 3கோடியே 71 லட்சம்.37,392 பக்தர்கள் சுவாமிக்கு தலைமுடி காணிக்கை செலுத்தினர்என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
விசில் செய்திகளுக்காக
ராதா சுரேஷ்
திருப்பதி