கோக்கு மாக்கு

பிரபல நடிகர் திடீர் மரணம் திறையுலகம் அஞ்சலி

⚫சற்றுமுன்: பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்

✍️மூத்த தமிழ் நடிகர் சரத்பாபு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன் உயிரிழந்தார்.

👉தமிழில் நாயகன், குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் நடித்து திரையுலைகையே திரும்பிப்பார்க்க வைத்தவர் சரத்பாபு. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

📌நடிகர் சரத்பாபுவின் திரை வாழ்க்கை

✍️1973ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற தெலுகு படத்தின் மூலம் அறிமுகமானார் சரத் பாபு. பின்னர் தமிழ், மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

✍️தமிழின் ஆகச்சிறந்த இயக்குநராக கருதப்படும் மகேந்திரனுக்கு பிடித்த நடிகர் சரத்பாபு. இறுதியாக அவர் பிப்ரவரி மாதம் வெளியான வசந்த முல்லை படத்தில் நடித்திருந்தார். மேலும் சரத்பாபு டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

📌சரத்பாபுவுக்கு என்ன பிரச்சனை?

✍️நடிகர் சரத்பாபு சற்று முன் காலமானார். அவருக்கு வயது முதிர்வு காரணமாக சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றில் பாதிப்பு இருந்தது.

✍️கடந்த மாதம் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடையவே, ஐதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் உயிர் பிரிந்தது.

✍️நடிகர் சரத்பாபு வாழ்க்கை பின்னணி

📌1951ல் ஆந்திராவில் பிறந்த சரத்பாபு, தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். தந்தையின் ஹோட்டல் தொழிலை தொடர விரும்பாத அவர், கல்லூரி காலத்தில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார்.

📌எனினும், அவரது கிட்டப்பார்வை பிரச்னையால், அந்த ஆசையும் நிறைவேறாமல் போனது. அந்தசமயம், அவரது அழகான தோற்றத்தை பார்த்து பலர் நடிக்க செல்லலாம் என கூற, அவரும் சினிமாவை நோக்கி நகர்ந்துள்ளார்.
.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button