ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
28.05.2023
திருமலை ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்
நாளை விண்ணில் செலுத்தவிருக்கும்
ஜிஎஸ்எல்வி எஃப்-12 மாதிரி வடிவத்திற்கு சிறப்பு பூஜைகள்
இஸ்ரோ விஞ்ஞானிகள் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தனர். முன்னதாக அவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். தரிசனத்தை தொடர்ந்து அவர்களுக்கு ஆலய ரெங்கநாயக மண்டபத்தில் ஆலய மரியாதைகளுடன் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர். பின்னர் நாளை விண்ணில் செலுத்தவிருக்கும் ஜிஎஸ்எல்வி எஃப்-12 விண்கலத்திற்கு முன்மாதிரி வடிவத்திற்கு வேத ஆசிர்வதங்களுடன் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த விண்கலம் நாளை காலை அதாவது மே மாதம் 29 திங்கட்கிழமை காலை10.42 மணிக்கு திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுகணை தளத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் டாக்டர்.சோம்நாத் தலைமையில் விண்வெளியில் ஏவப்படும். இதற்கான கவுண்ட் டவுன் இன்று துவங்கியது. விண்கலம் விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏழுமலையானை தரிசித்து அருள் பெற்றனர்.