ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
29.05.2023
ஆந்திர முதல்வர் பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம்
திருப்பதியில் ஒய் எஸ் ஆர் கட்சி நடத்திய பைக் பேரணி
ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்று மே மாதம் 29 நாளான இன்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி தலைமையில் பைக் பேரணி நடைபெற்றது. இதில் நகரின் ஒய் என ஆர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நகரில் பேரணி நிகழ்த்தினர். ஜெகன் மோகன் ரெட்டி நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் பற்றி பறைசாற்றியபடி இந்த பேரணி நடைபெற்றது என்பது குறிப்பிட்டதக்கது.