ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
30.05.2023
திருமலை ஏழுமலையானை தரிசித்த நடிகை வனிதா விஜயகுமார்
திருமலை ஏழுமலையான் ஆலயத்திற்கு வந்த வனிதா விஜயகுமார் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஆலயத்திற்கு வந்த அவருக்கு ஆலய அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர்.
பின்னர் அவருக்கு கோயில் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் வழங்கினர். கோயில் நிர்வாகிகள் அவருக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து தீர்த்த பிரசாதம் வழங்கி கௌரவித்தனர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
பின்னர் ஆலயத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர் சமீபத்தில் ‘மள்ளி பெள்ளி’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியானது.இத்திரைப்படத்தில் தனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தெலுங்கு ரசிகர்கள் தன்னை மிகவும் பாராட்டினர். மேலும் நல்ல வேடம் கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன் என்று அவர் கூறினார்