முன்னாள் நடிகை சங்கவி திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் நடிகை சங்கவி திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். நடிகர் விஜய்யின் முதல் படமான ரசிகன் திரைப்படம் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சங்கவி.தரிசனத்திற்குப் பிறகு அவருக்கு கோயில் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் வழங்கினர். அவருக்கு கோயில் நிர்வாகிகள் பட்டு வஸ்திரம் அணிவித்து தீர்த்த பிரசாதம் வழங்கி கௌரவித்தனர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசியலில் ஈடுபட போவதில்லை அதே போல் திரைப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை பல நாட்களுக்கு பிறகு சாமி தரிசனம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்