ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
01.06.2023
கோவிந்தராஜு சுவாமி கோவில் வளாகத்தில் அபஸ்வரம்
100 ஆண்டுகள் பழமையான மரம் முறிந்து விழுந்து ஒருவர் மரணம்
திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜர் ஆலயத்தின் வெளிப்பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான மரம் முறிந்து விழுந்தது. அருகே இருந்த கடப்பா மாவட்டத்தை சேர்ந்த பக்தர் டாக்டர் குர்ரப்ப சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூன்று பக்தர்களுக்கு தீவிர காயம் ஏற்பட்டது பலமான காற்று வீசியதில் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தீவிர நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி சுப்பாரெட்டி 100 ஆண்டு பழமையான அத்தி மரம் பலத்த காற்றில் முறிந்து விழுந்துள்ளது.இதில் பக்தர் ஒருவர் பலியானார் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.இறந்தவர்
குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியாது.இருப்பினும் அந்த குடும்பத்திற்கு ஐந்து லட்சம் கருணைத் தொகை வழங்க முடிவு செய்துள்ளோம் .மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.