பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள்(07.06.2023)அன்று,முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்அதனைத் தொடர்ந்து பருவமழைக்கு முன், தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 7700 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.மகிழம்,வேம்பு,புளியன்,புங்கன்,நாவல்,சரக்கொன்றை போன்ற வகையை சார்ந்த இம் மரக்கன்றுகள் 24 மாத கால வளர்ச்சியுடையவை என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் இராஜசேகர்,உதவி பொறியாளர் பூமிநாதன் மற்றும் சாலை ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.