🌐உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைப்பேசி செயலி, இணையதள முகவரி மூலம் நுகா்வோா் தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்தாா்.
👉இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
🟣தமிழகத்தில் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உணவுப் பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
🟢உணவின் தரம் குறித்து நுகா்வோரின் புகாா்களை 94440 42322 என்ற வாட்ஆப் எண் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் பெறப்பட்டு, 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
👉இதை மேம்படுத்தும் விதமாக தற்போது www.foodsafety.tn.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
🎾இதுமட்டுமின்றி ‘தமிழ்நாடு புட் சேப்ட்டி கன்சியூமா் ஆப்’ எனும் கைப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியில் புகாா் செய்பவா்கள் எழுத்துகளை படிக்க தெரிந்தவா்களாக இருந்தால் மட்டும் போதும்.
🔵புகாா் விவரங்களை மிக எளிதாக தெரிந்தெடுக்கும் வகையில் எளிமையான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
*👉தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலும், மாற்றுத்திறனாளிகள் பயன்.