மாநில நெடுஞ்சாலை எண் 39, திருநெல்வேலி —– செங்கோட்டை—– கொல்லம் சாலையினை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் வகைக்குகண்டியப்பேரி, வெட்டுவான்குளம், சீதப்பற்பநல்லூர், மாறாந்தை, ஆலங்குளம், பூலாங்குளம், சிவலார்குளம், பெத்தநாடார்பட்டி, கீழப்பாவூர் 2 ஆகிய கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக, நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக Award Enquiry 08.06.2023 ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்தும், தென்காசி வட்டம் கல்லூரணி மற்றும் குணராமநல்லூர் கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இன்று(09.06.2023) தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்தும் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம் ||தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு அலுவலர்) அவர்கள் தலைமையில் விசாரணை நடைபெற்றது.மேற்கண்ட விசாரணையில் திருநெல்வேலி தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம் II தனி வட்டாட்சியர் (நிஎ),நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் வருவாய்துறை பணியாளர்களும் கலந்து கொண்டு நில உரிமையாளர்களிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு இழப்பீட்டுத் தொகைவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை நாட்களில் ஆஜராக இயலாத உரிமையாளர்கள் நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட பத்திரம், பட்டா போன்று ஆவணங்களில் நகல்களை ஒர் விண்ணப்பத்துடன் இணைத்து A – 76 / 1, 5வது குறுக்குத்தெரு, தபால் நிலையம் எதிரில், மகராஜா நகர் அஞ்சல் பாளையங்கோட்டை என்ற முகவரியில் இயங்கிவரும் திருநெல்வேலி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் – II , தனிவட்டாட்சியர் அலுவலகத்தில்
நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம் எனவும் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம் II தனி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்