
சென்னை MMM மருத்துவமனை, பெண்ணாடம் லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஜீவல்லர்ஸ் இணைந்து நடத்துகின்ற இதய சிகிச்சை முகாம் பெண்ணாடம் லோட்டஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு நாட்கள் பெண்ணாடம் லயன்ஸ் சங்க தலைவர் வெ. சக்திவேல், ரோட்டரி சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.