தென்காசி மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில்
01.01.2011 -ற்கு முன்னர் கட்டுப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 30.06.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .துரை , இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் அறிவிப்புநகர் ஊரஅமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண் 76, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ(31)) துறை நாள் 14.06.2018 -வெளியிடப்பட்டன.இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை (online -ல் 14.06.2018 முதல் 13.09.2018 வரை மூன்று மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு இசைவு வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ரீட் மேல்முறையீடு மனுக்கள் எண் 233/2019 மற்றும் பலவற்றில் வழங்கப்பட்டுள்ள 10.02.2021 முதல் 04.04.2021 வரை இருவார காலத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன .மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க மேலும் 6 மாத காலம் கால நீட்டிப்பு அரசால் 24 .06.2022 முதல் 31.12 .2022வரை வழங்கப்பட்டது . பொழுது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக்க மற்றொரு வாய்ப்பாக 30.06.2023 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களை சமர்ப்பித்து இசைவு பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://tCP.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் அரிய வாய்ப்பு என்பதால் இதனை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு .துரை இரவிச்சந்திரன் இ.ஆ ப .அவர்கள் தெரிவித்துள்ளார்