ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
16.06.2023
திருப்பதியில் போட்டோ பிரேம் கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து
திருப்பதி இரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீகோவிந்தராஜர் ஆலய சன்னதி வீதியில் லாவண்யா போட்டோ பிரேம் கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. மிகவும் நெரிசலான அப்பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் லாவண்யா போட்டோ பிரேம் கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது . இதனைக் கண்டு அப்பகுதியில் செல்லும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் உயிர்சேதம் எதுவுமில்லை என்று கூறப்படுகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பணியாற்றி வருகின்றனர். விவரம் இன்னும் வெளியாகவில்லை.