திருப்பதி:
காளஹஸ்தியில் ஜன சேனா பிரமுகரின் கன்னத்தில் அறைந்த பெண் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ்,
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பவன் கல்யாண்னின் ஜன சேனா கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகரை பெண் காவலர் அஞ்சு யாதவ் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஸ்ரீகாளஹஸ்தியில் ஜனசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதனை அடுத்து போலீசாருக்கும், பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜனசேனா கட்சி பிரமுகரின் கன்னத்தில் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ் அறைந்தார். இதையடுத்து, ஜனசேனா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே ஒரு முறை பெண் வியாபாரி ஒருவரை தாக்கிய இந்த இன்ஸ்பெக்டர் மீண்டும் ஒருமுறை செய்திகளில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது