ராதா சுரேஷ் திருப்பதி ஆந்திர மாநிலம் 23.07.2023 திருப்பதி: ஆந்திரா மாநிலம் ஏலூர் நகரத்தில் சாலை சரி செய்ய வேண்டும் என்று ஒரு நபர் சாலையில் கட்டிலை போட்டுக்கொண்டு போராட்டம் ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது இதனால் ஏரிகள் , குளங்கள், நதிகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சில இடங்களில் சாலைகள் குளங்கள் போல் காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில் ஏலூர் நகரில் கங்கை அம்மன் கோயில் அருகே சாலை நடுவில் தண்ணீர் நிரம்பி உள்ள இடத்தில் ஒரு நபர் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டார். நடிரோட்டில் கட்டிலை போட்டுக்கொண்டு.. சாலை சரி செய்ய வேண்டும் என்று நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளார் . இதனைக் கண்டு அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருக்கின்றனர். இதனால் இந்த விடியோ வைரலாகி வருகிறது.