திண்டுக்கல் செய்தி
திண்டுக்கல்லை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யும் மணல் மற்றும் மண் கொள்ளையர்கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்
தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் MSand வகை மணல்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாடுக்கு வந்தது இந்நிலையில் பொதுமக்கள் மணல்களையே விரும்பி வந்தனர் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சில சமூக விரோதிகள் ஆற்று பகுதிகளிலும் மலை பகுதியில் உள்ள நீர் ஓடைகளிலும் மணல்களை அள்ளி அதிக லாபத்திற்கு விற்று அரசிற்க்கும் கனிம வளத்திற்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளனர் இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் புளியராஜக்காபட்டி கிராமத்தில் மண் அள்ளிய கும்பளை அந்த பகுதி மக்கள் முற்றுகை இட்டு தடுத்து நிருத்தி உள்ளனர் அப்போது அந்த பொதுமக்களின் கூட்டத்தில் பாஜக நிர்வாகி இருந்ததாக கூட படுகிறது அதை கண்ட மண் கொள்ளையர்கள் தாங்கள் அனைத்து கட்சி சார்ந்த மாவட்ட செயலாளர்களுக்கும் தலா 5 லட்ச ரூபாய் பணம் கொடுத்து தான் நாங்கள் இங்கு மண் அள்ளுகின்றோம் எனவே தங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் மேலும் பாஜக மாவட்ட செயலாளர் தனபால் அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது வேண்டுமென்றால் கேட்டுக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் கூறி மீண்டும் மண் தொடங்கினர்
இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தனபால் எனக்கு யார் பணம் கொடுத்தது கொடுத்தவரை வரச்சொல் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தினார் நீண்ட நேரம் வாக்குவாதத்திற்கு பிறகு தாங்கள் தெரியாமல் சொல்லிவிட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் என்று கூறியது அடுத்து அங்கிருந்த கூட்டம் கலைந்து சென்றது ஆனால் மண் அள்ளுவதை தடுக்க வந்த ஊர் பொதுமக்கள் கண்டிப்பான முறையில் இங்கு மண் அள்ளக்கூடாது என திட்டவட்டமாக கூறியதை அடுத்து அல்லிய மண்ணை அங்கேயே கொட்டி விட்டு வாகனங்களை எடுத்துச் சென்றனர் மேலும் இது சம்பந்தமாக புகார்களை அதிகாரிகளிடம் அளித்தால் புகார் வரும் எண்களை மண் கொள்ளையர்களிடம் அதிகாரிகளே கொடுத்து அவர்களை மிரட்டுவதாகவும் இது போன்ற மண் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்க கோரி தகவல் தெரிவிக்கும் நபர்களின் பாதுகாப்பையும் காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்