திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன்.
இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் காலகட்டத்தில் அவரது பினாமியாக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மார்க் பார்களிலில் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் மற்றும் பழனியில் தனியாக சிபிஎஸ்சி பள்ளியும் நடத்தி வருகிறார்
செந்தில் பாலாஜியின் கைதுக்கு பின்னர் அவரது ஆதரவாளர் என்று சந்தேகப்பட்ட இவரது வீட்டில் தற்போது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது
வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள அவரது வீட்டிலும் தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்டத்து பங்களாவிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் வேடசந்தூர் பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.