திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் நத்தம் மேலூர் சிங்கம்புணரி கோபால்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து வியாபாரிகள் காய்கறி கடைகள் நடத்துவதற்கு இங்கு வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா எட்டி மங்கலத்தைச் சேர்ந்த நாச்சான் மனைவி பேச்சி (வயது 60) என்பவர் வழக்கம் போல் காய்கறி கடை நடத்துவதற்காக சாலை ஓரத்தில் காய்கறி மூடைகளை அடுக்கி கடை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். காய்கறி கடை நடத்துவதற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் தாழ்வாக செல்லும் பழைய மின் வழி தடத்தை மாற்றி உயரமான அளவில் மின்கம்பம் ஊன்றப்பட்டது. அதில் மின் இணைப்பு கொடுக்காமல் மின் கம்பியை சுருட்டி கம்பத்தின் கீழ் தரையில் வைத்திருந்தனர். மின் இணைப்பு கொடுக்காத மின் கம்பியில் அருகில் இருந்த ஏற்கனவே மின்சாரம் சென்று கொண்டிருக்கும் மின் வழித்தடத்தில் உரசியதால் மின்சாரம் தாக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் காவல்துறையினர் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Read Next
கோக்கு மாக்கு
2 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
2 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
2 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
2 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
2 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
2 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
2 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
2 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
2 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
2 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
2 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
2 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
2 days ago
வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்
Related Articles
மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை.
4 weeks ago
Check Also
Close
-
தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி2 days ago