கோக்கு மாக்கு
Trending

திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் திரும்பிச் சென்ற அதிகாரிகளால் பரபரப்பு.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் சோலைஹால் திரையரங்கு சாலையில் உள்ளது. இங்கு 15 மீன் விற்பனை கடைகள் உள்ளன. இன்று 06.08.23 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் மீன், ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதன் காரணமாக திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்களை ரசாயனம் தடவி பதப்படுத்தி விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததன் பேரில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மீன் மார்க்கெட் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நல்ல மீன்களையும் அதிகாரிகள் கெட்டுப்போன மீன் எனக் கூறுவதாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீன்களை பறிமுதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் சோதனை நடத்துவதை நிறுத்திவிட்டு வெறும் கையுடன் மீன் மார்க்கெட்டில் இருந்து திரும்பி சென்றனர் இதனால் அங்கு ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button