தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படாமல் இருக்கிறது இதனால் மக்கள் அவதி! மூடியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் மூடியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொட்டல்புதூர் மெயின் ரோட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இன்னும் திறக்கப்படாமல் மூடியே வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதற்கு மக்கள் ஒன்று கடையம் செல்ல வேண்டும் அல்லது அம்பை செல்ல வேண்டும் இல்லை என்றால் தென்காசி செல்ல வேண்டும் நிலைமை இருப்பதால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
