கிருஷ்ணராயபுரம் அருகே தனியார் பள்ளி வாகனம் மீது தனியார் கொசுவலைக்கு ஆட்களை ஏற்றி சொல்லும் வாகனம் அதிவேகமாக சென்று மோதி 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்.
கரூர் மாவட்டம், மாயனூரில் செயல்பட்டு வரும் டான்செம் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு பள்ளி வாகனம் மூலம் மகாதானபுரம் கிருஷ்ணராயபுரம் திருக்காம்புலீயூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் ஈஸ்வரன் கோவில் அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வரும்போது இதேபோல் வீரராக்கியம் பகுதியில் செயல்பட்டு வரும் விகேஏ பாலிமர் கொசுவலை தயாரிப்பு பணிக்கு ஆட்களை ஏற்றி வரும் வாகனம் அதிவேகமாக வந்து மோதியதில் ஐந்துக்கு மேற்பட்ட மாணவர்கள் காயம். மாயனூர் போலீஸார் விசாரனை.
அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக டெக்ஸ்டைல்ஸ், கொசுவலைக்குச் செல்லும் தனியார் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.