கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.
கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அவரது மனைவி பெயரில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கியுள்ளனர்.
சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.