🔴அரசு ஊழியரை அரிவாள் கொண்டு மிரட்டிய பெண்மணி
🔴தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிகுளம் பகுதியில் மின் இணைப்பினை சரி செய்ய சென்ற மின் ஊழியரை அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய இடத்தில் மின் கம்பம் உள்ளது என்றும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மின் ஊழியரிடம் தகராறு செய்த்தோடு தன் கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு மின் கம்பத்திலிருந்து இறங்கிய ஊழியரின் மேல் எரிந்துள்ளார், மின் ஊழியருக்கு நிகழ்ந்த ஆபத்தான நிலையை கண்ட அக்கம் பக்கதினர் அப் பெண்மணியின் மீது தக்க நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுத்திட வேண்டுகோள் விடுத்துள்ளனர், அரசு ஊழியருக்கே உயிருக்கு ஆபத்தான நிலை என்றால் ….. அருகில் இருக்கும் பொது மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதே வேதனையான ஒன்று…..