கோக்கு மாக்கு

150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி சண்டை போட்ட காதல் ஜோடி

150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி சண்டை போட்ட காதல் ஜோடியால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கோரேலா- பென்ட்ரா-மார்வாகி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து அப்பகுதியில் உள்ள 150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறி உள்ளார்.

இதைப்பார்த்த அவரது காதலனும் மின் கோபுரத்தில் காதலியின் பின்னாலேயே ஏறி உள்ளார். தனது காதலி எந்த விபரீத முடிவும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் அது மேலும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு வைத்தும் இருவரும் சண்டை போட்டுள்ளனர்.

இதுபற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். போலீசார் அந்த ஜோடியை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து அரை மணிநேரத்துக்கு பிறகு இருவரும் மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினர். காதல் ஜோடியை எச்சரித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே காதல் ஜோடி மின் கோபுரத்தில் ஏறி சண்டை போட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button