பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசிய உரையின் 23 பகுதிகள் அதிரடியாக நீக்கியுள்ளது.
பிரதமர் மோடி மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது கடந்த 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இதில் மோடி மீது எதிர்க்கட்சிகள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும், ராகுல் பேசியதில் 23 பகுதிகளும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை அதானி குறித்து ராகுல் பேசிய பல பகுதிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.