எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு சாதகமானது’தான் என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோதி மக்களவையில் இன்று(ஆகஸ்ட் 10) அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாவதத்தில் உரையாற்றினார்
உரையின்போது எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதிலளித்து பேசினார்.
அப்போது உரையைத் தொடங்கும்போது, இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கடவுளின் ஆசிர்வாதமாகத் தான் கருதுவதாக பிரதமர் கூறினார்.
“நாங்கள் பொதுமக்களிடம் சென்றபோது எதிர்க்கட்சிகள் மீது முழு பலத்துடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அறிவித்தோம். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு அனுகூலமானது. 2024 தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி, பழைய சாதனைகளை முறியடித்து, மக்களின் ஆசியுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்,” என்று தெரிவித்தார்.
தனது உரையின்போது, பிரதமர் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தங்களுக்குச் சாதகமாக உள்ளதெனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஒரு விஷயத்திற்காக ஒன்றிணைந்தாலும், அவை தங்கள் பரம எதிரியுடன் ஒன்றிணைகின்றன. களத்தை எதிர்க்கட்சிகள் அமைத்திருக்கலாம். ஆனால், அதில் பவுண்டரிகளும் சிக்சர்களும் இங்கிருந்து(தேசிய ஜனநாயக கூட்டணி)தான் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நோ பால்களாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள்,” என்று தெரிவித்தார் பிரதமர் மோதி கிண்டலாக பேசினார்.
எதிர்க்கட்சிகளுக்கு ஐந்தாண்டுகள் கொடுத்தாலும், அவர்கள் தயாராகாமல் வந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் நாட்டிற்கு ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை.