கரூரில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் சிஎஸ்ஐ பிஷப் சாலமன் துரைசாமி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிமற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
போதைக்கு எதிரான விழிப்புணர்வு தமிழக முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கரூர் சிஎஸ்ஐ பிஷப் சாலமன் துரைசாமி கலை அறிவியல் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை
கரூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கொடியை சேர்த்து வைத்து பேரணியை தொடங்கி வைத்தார்இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தி வாரு போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கல்லூரியில் இருந்து தொடங்கி ஜவகர் பஜார்,கரூர் பேருந்து நிலையம், திண்ணப்பா கார்னர் போன்ற முக்கிய சாலைகளில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணியை ஏற்படுத்தினார்கள்.
அதேபோன்று அரசு, தனியார் பள்ளி மாணவ மாணவிகள் சைக்கிளில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியானது திருவள்ளுவர் மைதானத்தில் துவங்கி பேருந்து நிலையம், சர்ச் கார்னர், முக்கிய வீதிகள் வழியாக வந்து மாநகராட்சி அலுவலகம் முன்பாக நிறைவடைந்தது.