பொட்டல் புதூரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுகாக திறக்கப்பட்டது மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், தமிழகத்திலுள்ள, யூனியன் மற்றும் ஊராட்சி பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியில் இந்த சுகாதார மையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது
சுகாதார மையத்தில், டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், துணை பணியாளர் தலா ஒருவர் வீதம், ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்
காலை, 8:00 முதல் மதியம், 12:00 வரை, மாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணி வரை, இம்மையங்கள் செயல்படும்.
இச் சுகாதார மையத்தில், மருத்துவ பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்படுகிறது; தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்த சுகாதார நிலையத்தை பொட்டல்புதூர் பஞ்சாயத்து தலைவர் கணேசன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அவருடன் கடையம் வட்டார டீன் பழனி குமார் டாக்டர் அவர்களும் துணைத் தலைவர் A1 துரை, மாவட்ட கவுன்சிலர் மற்றும் பொட்டல்புதூர் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உடன் இருந்தனர்
இந்த சுகாதாரமைய திறப்பு விழாவில் பொட்டல்புதூர் மற்றும் கடையம் வட்டார செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டார்கள்