அங்கன்வாடி மையம் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு – வெளியேறிய புகைகளால் குழந்தைகள் அவதி
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இக்கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த அங்கன்வாடி மையம் அருகே குப்பை கிடங்கும் நிலையில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. தீ மளமளவென பிடித்த நிலையில் புகையானது குபுகுபுவென பரவி, அருகேயுள்ள அங்கன்வாடி மையத்திற்குள் நுழைந்தது.
இதனால் அவதியடைந்த குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும் சூழல் உருவாகியது. எனவே அங்கன்வாடி அருகே குப்பைகள் கொட்டி, தீ வைப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்…