கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கனமழை பெய்தது.
கிரூஷ்ணராயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லாலாபேட்டை, மாயனூர், மணவாசி, திருகிம்பூலியூர், லாலாபேட்டை, மகிளிப்பட்டி புணவாசிப்பட்டி, மகாதானபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் வெள்ளை நீராக ஓடியது. அப்போது கோரகுத்தி என்ற இடத்தில் மழைநீருடன் விஷ பாம்புகள் சென்றதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர்.
இன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக இடி மின்னல் காற்றுடன் பெய்த கன மழை நாள் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மழையின் காரணமாக பூமி குளிர்ச்சி அடைந்து குளிர்ந்த சீதோசன நிலை நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.