கை விலங்குடன் போலீஸிடம் இருந்து தப்பி ஓடிய பிரபல
தென் மாவட்ட திருடன் தமிழ்நாட்டில் 54 கேஸ்கள், கேரளாவில் 34 கேஸ்கள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிரபல பீரோ புல்லிங் திருடன் கை விலங்குடன் எஸ்கேப் தென்காசி மாவட்டம், கடையம், கல்யாணி புரம் அம்மன் கோவில் தெருவை சார்ந்த பாலமுருகன் என்பவர் கேரளா மாநிலம் மறையூர் காவல் நிலையத்தில் தேடப்படும் குற்றவாளி ஆவார், இவரை கேரளா காவல்துறையினர் தேடி வந்த நிலையில் திண்டுக்கல் அருகே தலைமறைவாக இருந்தவரை கைது செய்து அழைத்து வரும் வழியில் அம்மையநாயக்கனூர் டோல்கேட் அருகே பாத்ரூம் சென்றவர் கை விலங்குடன் தப்பி ஓட்டம், அவரது இடது கையில் கைவிலங்கு உள்ளது, நீல கலர் டிரவுஸர், கருப்பு கலர் டீ சர்ட் அணிந்து உள்ளார், காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்
தென்காசி மாவட்டத்தில் பீரோ புல்லிங்கில் கில்லாடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் தனிப்பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வந்த பாலமுருகன் கேரளாவிற்கு தப்பி ஓடி அங்கேயும் தன் கைவரிசைகளை காட்டிய போது பிடிபட்டுள்ளார் இது பற்றி கேரளா போலீசார் கூறும் பொழுது இவர் பாத்ரூம் செல்வதற்காக விலங்குடன் அனுப்பியதாக தெரிகிறது, அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளார், இவர் கடையத்தில் உள்ள தனது மனைவியை காண்பதற்கு வருவார் என கேள்விப்பட்டு இவரை பிடிப்பதற்காக தென்காசி பகுதியில் முகாமிட்டுள்ளனர், இச்சம்பவம் கடையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது …