அயோத்தியை சேர்ந்த பரம சாது சாமியார் பரம ஹன்ஸ் ஆச்சாரியா என்பவர் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது புகைப்படத்தை குத்தி கிழித்ததுடன் லைட்டர் கொண்டு எரித்துள்ளார்
மேலும் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் எனவும் அறிவித்துள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.