கடந்த மாதத்தில் கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது 10 ஆக சரிந்துள்ள நிலையில், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தக்காளி விற்பனையாகாததால் விவசாயிகள் அதனை குப்பையில் கொட்டிச் சென்றனர்.
குவியல் குவியலாக கொட்டிச் சென்ற தக்காளிகளை மாடுகள் தின்றது.