இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரத்தில் சக கலைஞராக ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்பதாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
இதற்கிடையே பல்வேறு தரப்பினர் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.