சந்தேகங்கள் :
- 16.8.2023 அன்று சீகூர் வனப்பகுதியில் இறந்த 2 குட்டி புலிகளின் தாய் புலி குறித்த தகவல் இல்லை
- நீலகிரி நடுவட்டம் வனச்சரகம் முடிமந்து பகுதியில், தனியார் எஸ்டேட்டுக்குள் மர்மமான முறையில் 7 வயதான புலி மரணித்தது குறித்த முழு விபரம் இதுவரை வெளியிடபடவில்லை
- இந்தச் சம்பவங்களுக்கு எல்லாம் முன்னதாக, பிப்ரவரி மாதம் நீலகிரியில் புலியை வேட்டையாடி அதன் பாகங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயன்ற, நான்கு பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்திருந்த நிலையில் 6 புலிகள் இறப்பு குறித்த விசாரணை சரியான வழியில் செல்கிறதா என சந்தேகம் உள்ளது
- 10.9.2023 காலை வனத்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் இறந்த 2 புலிகளும் பெண் புலிகள் என குறிப்பிட்டுள்ளனர் . ஆனால் PM ரிப்போர்ட் -ல் ஆண்புலிகள் என கூறியுள்ளனர் .
அப்படியானால் ஆண் பெண் புலி வித்தியாசம் கண்டுபிடிக்க கூட தெரியாத நிலையில் வனத்துறையினர் உள்ளனர்.
அல்லது மேலும் 2 புலிகள் இறப்பை மறைத்துவிட்டனர் என எடுத்து கொள்ளலாமா ?
5 . புலிகள் காப்பக பகுதியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் சுற்றலவில் எந்த வித அனுமதியில்லாத நடவடிக்கையும் இருக்க கூடாது .அப்படி இருக்கையில் இந்த மாடும் மாட்டு உரிமையாளரும் புலிகள் காப்பக பகுதிக்குள் எப்படி சென்றனர்.
- 2 புலிகள் இறந்துகிடந்த நீர் பகுதிக்கு அருகிலேயே மாடு இறந்த நிலையில் கிடந்ததை 10.9.2023 காலை வெளியிட்ட செய்திகுறிப்பில் ஏன் கூறவில்லை
- ஒவ்வொரு முறையும் புலிகள் இறந்து சில நாட்கள் கடந்த பிறகே கண்டுபிடிக்கபட்டுள்ளது . அப்படியானால் ஒவ்வொரு வனச்சரகத்திலும் வேட்டை தடுப்பு காவலர் , வன கண்காணிப்பாளர் , வனகாப்பாளர் , வனவர் , வனசரகர் உட்பட்ட பெரும் படையே உள்ளது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்