அம்பாசமுத்திரம் அருகே தந்தை மகனுக்கு ஓராண்டு ஜெயில்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேலஏர்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரை முன் விரோதம் காரணமாக கணபதி மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு உருட்டு கட்டையால் தாக்கி உள்ளனர்.
இதுகுறித்த வழக்கு அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியது. இதில் தந்தை மகனுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது