சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத்தீ. அனைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் …..
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான உள்ளார் பீட் வனப்பகுதியில் காட்டுத்தீ திடீரென பற்றி எரிந்து வருகிறது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்து வருவதால் தீ மளமளவென பற்றி எரிந்து வருகிறது.இதனால் தீயை அணைக்கும் பணிசவாலாக உள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனால் மேற்கு தொடர்ச்சிமலலைப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகை மரங்கள் ,செடிகள் எரிந்து நாசமாகி இருக்க கூடும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த காட்டுத்தீயை அணைக்கம் பணியில் பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .இன்று மாலை வரை தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் இரவு என்பதால் இனி நாளை காலை மீண்டும் தீயை அனைக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் என வனத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் வெயிலின் தாக்கத்தால் காட்டு தீ பற்றி எரிந்ததா? இல்லை மர்மநபர்கள் எவரேனும் தீயை பற்ற வைத்து விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…..